ரகசிய காதல்… விரைவில் டும் டும் டும்.. ஷாக் கொடுக்கும் இலியானா!

ரகசிய காதல்… விரைவில் டும் டும் டும்.. ஷாக் கொடுக்கும் இலியானா!

நடிகை இலியானா விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமான இலியானா தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். ‘நண்பன்’ இலியானாவுக்கு பெயரை வாங்கிக் கொடுத்தாலும் தமிழில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் இல்லை.

இதனால் அவரின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. அக்ஷய்குமாருடன் இலியானா நடித்த ‘ருஸ்தம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ‘பாட்சகோ’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரும் புகைப்படக் கலைஞருமான ஆண்ட்ரூ என்பவரை, இலியானா திருமணம் செய்து கொள்ள போவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக புதிய படங்களில் ஒப்பந்தமாவதை அவர் தவிர்த்து வருகிறார். விரைவில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரின் திருமணமும் நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts