ரெக்கார்ட் பிரேக் வசூல் சாதனை படைத்த சுல்தான்..!

ரெக்கார்ட் பிரேக் வசூல் சாதனை படைத்த சுல்தான்..!

சல்மான் கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சுல்தான்’ படம் இப்படி ஒரு சாதனை படைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாலிவுட்டில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை அள்ளிய ‘சுல்தான்’ படம் 5 நாட்களிலேயே உலகளவில் 320 கோடி ரூபாய் கிராஸ் வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இது வேற எந்தப் படமும் படைக்காத சாதனை என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய சாதனையும் படைத்திருக்கிறது சுல்தான்.

இப்படம் வெளியான முதல் 7 நாட்களில், இந்தியாவில் மட்டுமே 200 கோடிக்கும் அதிகமாக நெட் வசூலைக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இந்திய அளவில் இதற்கு முன்பு 200 கோடி நெட் வசூலை, அமீர்கானின் ‘பிகே’, ‘தூம் 3’ மற்றும் சல்மான் கானின் ‘பஜிரங்கி பைஜான்’ ஆகிய படங்கள் 9 நாட்களில் பெற்றன. ஆனால், இந்த சாதனையை 7 நாட்களில் செய்து ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கிறது சுல்தான்.

இந்திய அளவில் அதிகம் நெட் வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் இருக்கிறது ‘சுல்தான்’. இதற்கு முன்புசென்னை எக்ஸ்பிரஸ், தூம் 3, பஜிரங்கி பைஜான், பிகே ஆகிய படங்களே இந்திய அளவில் அதிக நெட் வசூலை குவித்த படங்களாக இருக்கிறது. கூடிய விரைவில் அந்த சாதனை சுல்தான் முறியடிக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.

Related posts